பெரியார் பிறந்தநாள் விழா

கம்மாபுரம், செப். 20:  கம்மாபுரம் ஒன்றியத்தில் தி.மு.க சார்பில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராயர் பெரியார் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரெங்கநாதன், மாவட்ட பிரதிநிதிகள் இளவரசன், செல்வராஜ், ஒன்றிய தலைவர் ராமசாமி, பொருளாளர் இளவரசன், துணை செயலாளர்கள் வேல்முருகன், கேசவபெருமாள், இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், கிளை செயலாளர்கள் திருநாராயணன், முனுசாமி, அருள்தாஸ், ஜெயக்குமார், சக்திமுருகன், லோகநாதன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசகுழி கிராமத்தில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பெரியார் கொள்கை குறித்த உறுதிமொழி ஏற்றனர். மாவட்ட பிரதிநிதிகள் ஆபேல், பழனியப்பன், அந்தோணிசாமி, ஒன்றிய தலைவர் பட்டுகுமார், துணைச் செயலர் பாக்கியலட்சுமி பன்னீர்செல்வம், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்கள் தம்பிதுரை, சரவணன், கிரிதரன், ரத்தினகுமார், விஜயகாந்த் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: