கடலூர் மாநகராட்சி பகுதியில் காட்சி பொருளாக மாறிய மணி கூண்டுகள்

கடலூர், செப். 13: பணி நிமித்தம் மற்றும் சொந்த வேலை காரணமாக வெளியில் செல்லும் பொதுமக்கள் நேரத்தை தெரிந்து கொள்ள வசதியாக, கடலூர் நகரின் முக்கிய இடங்களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மணிக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. நான்கு திசைகளிலும் இருந்தும் பொதுமக்கள் நேரத்தை பார்க்கக் கூடிய வகையில், நான்கு பக்கங்களிலும் கடிகாரம் பொருத்தப்பட்ட கோபுர வடிவில் மணிக்கூண்டுகள் அமைக்கப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, மணி அடித்தும் நேரத்தை தெரிவித்தன.

கடலூரில், மஞ்சக்குப்பம், முதுநகர், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் பகுதிகளில் அமைக்கப்பட்ட மணிக்கூண்டுகள் பிரபலமானவை. குறிப்பாக கடலூர் முதுநகரில் மணிக்கூண்டு இருக்கும் இடத்தை, மணிக்கூண்டு பஸ் நிறுத்தம் என்றே அழைப்பர். அடுத்து, கடலூர் பஸ் நிலையத்திலும், மஞ்சக்குப்பம் நகராட்சி பூங்காவிலும் அமைக்கப்பட்டன. இந்த மணிக்கூண்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல், பயன்பாடின்றி காட்சி பொருளாக மாறியுள்ளன. எனவே, மணிக்கூண்டுகளில் உள்ள கடிகாரங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: