மீன் இறைச்சி கடைகளில் சேர்மன் திடீர் ஆய்வு

பண்ருட்டி, செப். 13: பண்ருட்டி நகராட்சி சார்பில் கட்டப்பட்ட மீன் இறைச்சி கடைகளை நேற்று நகர மன்ற தலைவர் ராசேந்திரன் திடீர் ஆய்வு செய்தார். இறைச்சி கடைகளில் மேற்கூரை சேதம் அடைந்து இருப்பதை பார்வையிட்டு சீரமைக்கப்படும் என்றார். ஒவ்வொரு மீன் கடையின் உரிமையாளர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் வாய்க்காலில் உள்ள கழிவுகளை உடனே அகற்ற உத்தரவிட்டார். தற்போது கடைகள், கட்டிடம் யார் பெயரில் உள்ளது என நகராட்சி அலுவலர்களிடம் கேட்டார். அப்போது சுகாதார அலுவலர் முருகேசன், ஆய்வாளர் ஜெய் சந்திரன், பணி ஆய்வாளர் சாம்பசிவம், அவைத் தலைவர் ராஜா, இளைஞர் அணி பாலசந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: