பேச்சுவார்த்தையில் தீர்வு உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

நெல்லிக்குப்பம், செப். 9: நெல்லிக்குப்பம் நகராட்சி 24வது வார்டு கவுன்சிலர் ராணி. இவர் சர்க்கரை ஆலையால் தங்கள் பகுதி அதிகமாக பாதிக்கப்படுவதை கண்டித்தும், சர்க்கரை ஆலையை ஒட்டியுள்ள தங்களது பகுதிக்கு சாலை, குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், சர்க்கரை ஆலை அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, துணைத்தலைவர் கிரிஜா, துப்புரவு அலுவலர் சக்திவேல், ஆலை அதிகாரிகள் பிரான்சிஸ், சிவமணி, கேசவன், கவுன்சிலர்கள் ராணி, பன்னீர்செல்வம், முத்தமிழன், திமுக நகர செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கவுன்சிலர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தருமாறு சேர்மன் ஜெயந்தி கேட்டுக்கொண்டார். அப்போது ஆலை அதிகாரிகள், எங்களுக்கு அளித்துள்ள அனுமதி அளவுக்கு செலவானால் உடனடியாக செய்து தருகிறோம். கூடுதல் செலவாகும் தருணத்தில் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்று ஒரு மாதத்தில் பணிகளை செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், பணிகளை செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என கவுன்சிலர் ராணி தெரிவித்தார்.

Related Stories: