ரயிலில் கடத்திய 25 கிலோ குட்காவுடன் வாலிபர் கைது

சேலம், செப்.7:சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த சோதனையில், ரயிலில் கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்காவுடன் பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். வட மாநிலங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு ரயிலில் கஞ்சா, போதை புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ரயில்வே போலீசில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தவகையில் சேலம் ரயில்ேவ ஸ்டேஷனில் நேற்று அதிகாலை, வட மாநிலங்களில் இருந்து வந்த ரயில்களில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். 4வது பிளாட்பார்ம்மில் வந்து நின்ற மும்பை-கோவை குர்லா எக்ஸ்பிரசில் முன்பதிவில்லா பெட்டியில் ஏறி சோதனையிட்டனர். அப்போது, சந்தேகப்படும் படி இருந்த வாலிபரை பிடித்து, அவர் வைத்திருந்த பேக்குகளை பரிசோதித்தனர். அதனுள் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருந்தன. உடனே அவரை கீழே இறக்கி, அதனை பரிமுதல் செய்தனர். ஒட்டுமொத்தமாக பான்மசாலா, குட்கா என 25 கிலோ எடையில் போதை புகையிலை பொருட்கள் இருந்தன. தொடர் விசாரணையில் அந்த வாலிபர், பீகார் மாநிலம் ஜம்மூய் மாவட்டம் அலிகாஞ்ச் அசல்மாநகரை சேர்ந்த திலிப்குமார் (36) எனத்தெரியவந்தது. அவர், பீகாரில் இருந்து கோவைக்கு வேலைக்கு வந்ததும், வரும்போது போதை புகையிலை பொருட்களை வாங்கி பேக்கில் அடைத்து கடத்தியதும் தெரியவந்தது. அவர் மீது சேலம் ரயில்வே வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: