ஆரோக்கிய அன்னை ஆலயத்தேர் திருவிழா

மல்லசமுத்திரம், செப். 7: மல்லசமுத்திரம் ஆரோக்கிய அன்னை ஆலயத்தேர் திருவிழா இன்று (7ம்தேதி) மாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்கு தந்தை சங்ககிரி ஜான் ஆரோக்கியராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. விழாவைொட்டி நாளை 8ம்தேதி காலை முதல் 10ம்தேதி மாலை வரை நவநாள் திருப்பலி நடக்கிறது. 11ம்தேதி சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் திருவிழா திருப்பலி நடத்தி வைக்கிறார். அன்று மாலை அன்னை அலங்கார தேர் மந்திரிப்பு, தேர் பவனி மல்லசமுத்திரம் டாக்டர் சுப்பராயன் ரோடு, சேலம் மெயின் ரோடு, வைப்பமலை மெயின் ரோடு நான்கு ரதவீதி ஆகிய வழியாக சென்று ஆலயத்தை அடைகிறது. இரவு திருவிழா கொடி இறக்கம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அருட்பணி கிளமெண்ட்ராஜ் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: