டூவீலரில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

பரமத்திவேலூர், செப். 7: பரமத்திவேலூர் அடுத்த கூடச்சேரி மூர்த்திபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் முருகேசன்( 43). இவருக்கு  தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து முருகேசன் வீட்டுக்கு டூவீலரில் சென்றுள்ளார். வேலகவுண்டம்பட்டி - பரமத்தி சாலையில் கூடச்சேரி கூட்டுறவு வங்கி அருகில், திடீரென நிலை தடுமாறி டூவீலரில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடநை்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முருகேசனின் தாய் உண்ணம்மாள், நல்லூர் காவல் நிலையத்தில் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் எஸ்ஐ வேலுசாமி வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்.

Related Stories: