கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு

கடலூர், செப். 7: கடலூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாவாடை மகன் அபிஷேக். இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கோகுல் என்பவருடன் கடலூரிலிருந்து டி.புதுப்பாளையம் செல்லும் பஸ்சில் சென்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி, இருவரும் நடந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அருள் ஆகியோர் அபிஷேக் மற்றும் கோகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அபிஷேக்கின் அண்ணன் நேதாஜியும், கோகுலின் அண்ணன் கோபிநாத்தும் அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் தங்களது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தமிழ்செல்வன் உள்ளிட்ட 4 பேரும், அவர்கள் இருவரையும் வழிமறித்து கத்தியால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், தமிழ்செல்வன், நேதாஜி, கோபிநாத், கோகுல் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: