கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கான நீச்சல் பயிற்சி

கடலூர், செப். 7: 2ம் நிலை காவலர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள், விழுப்புரம் மாவட்டம் கா.குப்பம் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் 102 பேருக்கு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை விழுப்புரம் டிஎஸ்பி கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பாலசிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். நாளை மேலும் 90 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Related Stories: