2 வீடுகளில் துணிகர கொள்ளை

தர்மபுரி, ஆக.26: மொரப்பூர் அடுத்த சி.சொப்பம்பட்டியை சேர்ந்தவர் மயில்முருகன் மகன் கவியரசு (28), விவசாயி. இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். பழைய வீட்டில் இருந்த மிக்சி, 2 வெண்கல குடம், புதிய வயர்கள் ஆகியவற்றை புதிய வீட்டில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் அங்கு சென்று பார்த்தபோது மிக்சி, வெண்கல குடங்கள் உள்ளிட்டவைகளை காணவில்லை. இதுகுறித்து கவியரசு அளித்த புகாரின் பேரில், மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், காரிமங்கலம் அருகே புள்ளுகுறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன் (60). துடப்பங்கள் கட்டி வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் மகள் வீடு உள்ளது. மருமகன் ராணுவத்தில் உத்தரபிரதேசத்தில் வேலை செய்து வருகிறார். மகளும், மருமகனும் உத்தரபிரதேசத்தில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலையில், மகளின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 1லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: