தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரை, ஆக.26: ஊத்தங்கரையில் உள்ள முனியப்பன் கோயில் பகுதியில் தேங்கிய கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதனை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை நகரின் மத்திய பகுதியில் கோட்டை முனியப்பன் கோயில் தெரு உள்ளது. இங்கு பெரிய குளம் மற்றும் அதன் அருகில்  குட்டை ஏரி உள்ளது. காமராஜ் நகர், சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வழியாக ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் வழியாக சென்று முனியப்பன் கோயில் பகுதியில் தேங்குகிறது. மேலும், மழை பெய்யும் போது கழிவு நீருடன் கலந்து தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால், அம்பேத்கர் நகரில் தேங்கிய கழிவு நீரை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: