திருவள்ளூர் வடக்கு அதிமுகவில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் நியமனம்

பொன்னேரி: திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில், நேற்று முன்தினம் ஏலியம்பேடு கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணி தனித்தனியே இயங்கி வருகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொது செயலாளர் நியமனம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுகவில், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், நேற்று முன்தினம் ஏலியம்பேடு கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரை மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், பூண்டி ஒன்றிய நிர்வாகிகள், பொன்னேரி நகராட்சி, ஆரணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories: