முடி திருத்துவோர் சங்கம் சார்பில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நிதியுதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் அரசு பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவ - மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சங்கத்தினர்  பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். முதல் ஐந்து இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர் எம்.ராஜா, மாவட்ட சிறப்பு தலைவர் ஆர்.பச்சையப்பன், துணை தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் குமார், மாவட்ட பொது செயலாளர் ஜி.எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 9 பேருக்கு மாநில துணை தலைவர் எம்.நடேசன், மாநில பொது செயலாளர் ஏ.ராஜன், மாநில பொருளாளர் எஸ்.குமார், மாநில துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாநில இளைஞரணி அமைப்பாளர் கதிர் ஆகியோர் கலந்து கொண்டு கல்வி உதவி தொகைகளை வழங்கினர்.

காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் முனிசாமி ஆகியோர் அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். நிர்வாகிகள் குமார், முருகன், தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: