×

கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம், கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஈ.கந்தபாபு தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் பி.ரம்யா பாண்டியன், வார்டு உறுப்பினர்கள் காமாட்சி கோவிந்தராஜ், கட்டதொட்டி எம்.குணசேகரன், டி.கல்பனா தேவராஜ், டி.ராஜேஷ், பி.யமுனா பாரதிராஜா ஊராட்சி செயலர் எம்.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய குழு துணைத் தலைவர் கே.பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் எல்.ஜெயஸ்ரீலோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், சுகாதாரம் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்வது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், பொறுப்பு துறைகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா, வேளாண் உழவர் நலத்துறை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Korattur ,
× RELATED ஒரே நாளில் பைக், செல்போன் பறித்த ரவுடி, வழிப்பறி கொள்ளையன் கைது