உளுந்தை, தொடுகாடு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானம்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் வசந்தா, ஊராட்சி செயலர் முனுசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சுகாதாரம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்வது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன்  திருவிழா, வேளாண் உழவர் நலத்துறை, குழந்தைகள் அவசர உதவி எண் மற்றும் முதியோர் உதவி எண், இதர பொருட்கள் குறித்தும் என 16 திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடையே விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அத்தியாவசிய தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்தனர்.

விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கே.ரமேஷ் தெரிவித்தார். மேலும் கடம்பத்தூர் ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தவமேரி ஆனந்தன், ஊராட்சி செயலர் பெருமாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். பொது மக்கள் கோரிக்கை அனைத்தும் விரைவில் நிறைவேற்றித்தர நடவடிக்கை  எடுக்கப்படும் என ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.

Related Stories: