வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

சேலம்: சேலம் மாசிநாயக்கன்பட்டி குயவன் காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு திருப்பதிக்கு சென்றிருந்தார். நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சரவணன் மற்றும் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் வீட்டில் இருந்த 50ஆயிரம் ரூபாய் மற்றும் 18கிராம் தங்க நகை ஆகியவை திருடுபோயிருப்பதாக சரவணன் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் திருப்பதியில் இருந்து வந்த பிறகே முழுமையாக எவ்வளவு பொருட்கள் கொள்ளை போனது என தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: