வீடுகள் தோறும் 3 நாள் தேசியக்கொடி ஏற்றுங்கள்

நாமக்கல்: சுதந்திரன தின அமுதப்பெருவிழாவையொட்டி, இன்று முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுமாறு, பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் சுதந்திர திருநாள், அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இன்று(13ம் தேதி) முதல் 15ம் தேதி வரை 3 நாட்கள் அனைத்து வீடுகளிலும் கொடியேற்ற நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் குறைந்த விலையில் தரமான தேசிய கொடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தனியார் கல்லூரிகள், அறக்கட்டளை நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனிநபர்கள் மூலம் தேசியக்கொடிகள் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்க மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, இந்தியன் வங்கியின் உதவி பொது மேலாளர் சசிரேகா மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதிஷ்குமார் ஆகியோர் 5000 தேசியக்கொடிகளை பொதுமக்களுக்கு வழங்க நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) கலையரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: