மாரியம்மன் கோயிலில் மாவிளக்கு ஊர்வலம்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த சவுளுப்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா, கடந்த 8ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு விநாயகர், சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. பால்குட ஊர்வலம், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் ேபான்ற நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் நேற்று காலை 11 மணிக்கு ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, சக்தி மாரியம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: