மணவாளக்குறிச்சி அருகே விசைப்படகில் மயங்கி விழுந்து மீனவர் பலி

குளச்சல்: மணவாளக்குறிச்சி  அருகே முட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின் (55). இவர் புரூஸ்  என்பவரின் விசைப்படகில், கடந்த 9ம் தேதி மீன்பிடிக்க சென்றார். முட்டத்தை  சேர்ந்த யூஜின் என்பவர் விசைப்படகை செலுத்தியுள்ளார். மேலும் 25  தொழிலாளர்கள் உடன் ெசன்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முட்டத்தில்  இருந்து 42 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது  சிறுநீர் கழிக்க சென்ற ஜஸ்டின் திடீரென படகில் மயங்கி விழுந்தார்.  அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் உடனடியாக விசைப்படகை கரைக்கு  திருப்பினர்.

ஆனால் கரை வந்து சேர்வதற்கு முன்பே ஜஸ்டின் பரிதாபமாக இறந்து  போனார். சம்பவம் தொடர்பாக குளச்சல் மரைன் போலீசுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விரைந்து  வந்து சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது. இறந்து போன ஜஸ்டினுக்கு விஜி என்ற மனைவியும், ஒரு  மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories: