கருங்கல் அருகே திடீரென திறக்கப்பட்ட கல்குவாரி லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கருங்கல்: கருங்கல் அருகே பூட்டப்பட்டிருந்த கல்குவாரி திடீர் என்று செயல்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியில் ஒரு கல்குவாரி இயங்கி வந்தது. இதன் அருகே விளை நிலங்கள் மற்றும் வீடுகள் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் கல்குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக கல்குவாரி செயல்படவில்லை. இந்த நிலையில் நேற்று திடீர் என்று பெரிய டிப்பர் லாரிகள்  இந்த குவாரிக்கு வரிசையாக வந்தன. பொக்லைன் இயந்திரம் மூலம் கற்கள் அவற்றில் ஏற்றப்பட்டன.

இதை அறிந்த அப்பகுதி ெபாதுமக்கள் திரண்டு வந்து கல் ஏற்றிக்கொண்டிருந்த 5 வாகனங்களையும் சிறைபிடித்து ேபாராட்டம் நடத்தினர். நிறுத்தி வைத்திருந்த கல்குவாரியை எப்படி செயல்பட அனுமதிக்கலாம் என்று கேட்டு கோஷங்கள் எழுப்பினர். கருங்கல் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ெதாடர்ந்து கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்று முன்தினம் தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து ஒரு மீனவர் உயிரிழந்தார். இதனால் மக்கள் போராட்டம் நடத்தினர். அதனால் உடனடியாக மீன்பிடி துறைமுகத்தில் அதிக அலை தாக்கும் பகுதிகளில் கற்களை போட நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

புதிதாக பாறைகள் உடைக்கப்படமாட்டாது. உடைத்து போடப்பட்டுள்ள கற்கள் மட்டும் ெகாண்டு ெசல்லப்படும். 30 லாரி கற்களை மட்டுமே ஏற்றி செல்லப்படும், புதிதாக பாறைகள் உடைக்கப்படாது என்றும் தாசில்தார் உறுதி அளித்தார். இதன் அடிப்படையில் பொதுமக்கள் சிறை பிடித்த லாரிகளை விடுவித்து கலைந்து சென்றனர்.

Related Stories: