நாகர்கோவிலில் தெருக்கள் படிப்படியாக சீரமைக்கப்படும்: மேயர் மகேஷ் தகவல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு சாலோம் நகர் மற்றும் கலை நகரில் சுமார் ₹1 கோடியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி நிர்வாக அலுவலர் ராம் மோகன், நகர் நல அலுவலர் ஜாண், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் திமுக நிர்வாகிகள் பிரசாத், குமார், பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மகேஷ், நாகர்கோவிலில் மோசமாக உள்ள தெருக்களை சீரமைக்கும் பணி நடக்கின்றன. படிப்படியாக அனைத்து தெருக்களிலும் சாலைகள் சீரமைக்கப்படும். பொதுமக்கள் சாலைகளில் கழிவுகள், குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: