பூண்டி ஊராட்சியில் 1232 வீட்டிற்கும் தேசிய கொடி

திருவள்ளூர்: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இல்லம் தோறு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசின் அறிவித்தது. இதனையடுத்து திருவள்ளூர் கலெக்டர் உத்தரவின்பேரில் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் வீடு, வீடாக தேசியக் கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் வழங்கினார்.

பூண்டி ஊராட்சியில் உள்ள பூண்டி, ரங்காபுரம், கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 1232 வீடுகள், கடைகளுக்கு நேரில் சென்று தேசியக் கொடியை ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் வழங்கினார்.

மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி அவர்களுக்கும் தேசியக் கொடியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சுந்தரி சிவா, ஊர் பெரியவர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர் சுகன்யா,  ஊராட்சி செயலாளர் துரை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதவல்லி, பள்ளிதலைமை ஆசிரியை பிரேமா, உதவி தலைமை ஆசிரியை பாப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். 

Related Stories: