அனைத்து நிறுவனங்களிலும் தேசிய கொடி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய திருநாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் இன்று (13ம் தேதி) முதல் வரும் 15ம் தேதி வரை தேசிய கொடியை முறைப்படி ஏற்றி இந்த 75வது சுதந்திர தினத்தை சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழா என்ற வகையில் சிறப்பாக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் தேசிய கொடியை ஏற்றி நிறுவன பணியிடத்தில் தொழிலாளர்களுடன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்து இதனை http.//amritmahotsay.nic.in  என்ற இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்யவும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: