×

மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

ஸ்ரீ பெரும்புதுார்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதுார் அடுத்த கிளாய் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆனந்தன் (33). இவர், ஸ்ரீ பெரும்புதுார் அருகே போந்துாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே ரத்த காயங்களுடன் ஆனந்தன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீ பெரும்புதூர் போலீசார் ஆனந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீ பெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் ஆனந்தன் கடந்த சில தினங்களாக மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கறவை மாடு வாங்க மானியத்துடன் கடன்