×

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளுக்கு தேசியக்கொடி விநியோகம்

காஞ்சிபுரம்: 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளுக்கு தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 கிராம ஊராட்சிகளிலும் அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் திட்ட இயக்குனர்  தேவி ஆகியோரின் அறிவுருத்தி இருந்தனர்.

அதன்படி, ஒவ்வொரு வீடுகளிலும் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை அனைவரும் அவர்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மூலம் அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றிடும் வகையில் ஒன்றிய குழு பெருந்தலைவர்  மலர்விழி குமார் தலைமையில் தேசியக்கொடிகள் வீடு தோறும் வழங்கிடும் வகையில் விநியோகிக்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Kanchipuram Union ,
× RELATED காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளுக்கு தேசியக்கொடி விநியோகம்