புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லையில் சாலை விபத்து பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு

ஓட்டப்பிடாரம், ஆக. 12: புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை விபத்து பகுதிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக  தூத்துக்குடி, மதுரை இசிஆர் ரோடு சந்திப்பு பகுதி கண்டறியப்பட்டு உள்ளது. இப்பகுதியில் எஸ்ஐ பாலன் தலைமையில் எஸ்எஸ்ஐ வீரப்பெருமாள், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ராஜா, மேலஅரசடி பஞ்.  செயலர் பழனி முருகன், 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கணேசன் மற்றும் பொறியியல்  கல்லூரி மாணவர்கள் புஷ்பராஜ், முத்துச்செல்வம் மற்றும் கலைக்கல்லூரி  மாணவர்கள் மதன்குமார், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் விபத்து தடுப்பு பணி அரசால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: