போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு

திருச்செந்தூர், ஆக. 12: திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் நேற்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை வலியுறுத்தி போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று  அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள் ஆனந்த்ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆர்டிஓ புஹாரி, நகராட்சி சேர்மன் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், ஆணையர் வேலவன் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர் (பொ) நடராஜன் வரவேற்றார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விழிப்புணர்வு உறுதிமொழியை தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் சுவாமிநாதன், தாலுகா இன்ஸ்பெக்டர் முரளிதரன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டவேல், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆனந்தராமச்சந்திரன், அந்தோணிட்ரூமன், மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட பஞ். துணை தலைவர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஜெயகுமார்ரூபன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் எப்ரேம் நன்றி கூறினார்.

Related Stories: