முள்ளிக்குளத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்

புளியங்குடி, ஆக. 12: புளியங்குடி காவல் துறை சார்பில் அருகேயுள்ள முள்ளிக்குளத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தலைமை வகித்த எஸ்ஐ பரத்லிங்கம் பேசுகையில் ‘‘ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது. இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்’’ என அறிவுரை கூறினார். சிறப்பு எஸ்ஐ மாடசாமி நன்றி கூறினார்.

Related Stories: