தலைவன்கோட்டை அருகே பட்டக்குறிச்சி வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆடி பெருக்கு விழா

புளியங்குடி, ஆக. 12:  புளியங்குடி அருகே தலைவன்கோட்டை அடுத்த பட்டக்குறிச்சி வெயிலுகந்தம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி பெருக்கு விழாவில் ெபண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். புளியங்குடி அருகே தலைவன்கோட்டை அடுத்த பட்டக்குறிச்சி வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆடி பெருக்கு விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. இதில் திரளாகப் பங்ேகற்ற பெண்கள் உள்ளிட்ட பக்தர்களுக்கு மங்கல பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்

Related Stories: