தென்காசியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி,ஆக.12: தென்காசியில் நாளை தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்ட செய்தி குறிப்பு:

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ, www.deotksjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களின் வருகையை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முகாமில் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் நாளை  காலை 10 மணிக்கு அலுவலக முகவரியான கதவு எண் 144, 60 அடி ரோடு, சக்தி நகர் தென்காசிக்கு தங்களது அனைத்து கல்விச்சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு, ஆதார்கார்டு நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. அனுமதி இலவசம். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: