பேராவூரணி அரசு பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

பேராவூரணி, ஆக. 12:  இளம் வயதில் சிறுவர்களும், மாணவர்களும் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது எதிர்கால வாழ்வை சீரழித்துக்கொள்ளும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ அசோக்குமார் தலைமை வகித்தார். ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் முதல்வன், பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய க்குழு தலைவர் முத்துமாணிக்கம் துணை தாசில்தார் சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், பேரூராட்சி துணைத் தலைவர் பழனிவேல், சமூக ஆர்வலர் அப்துல் மஜீத், உதவி தலைமை ஆசிரியர் சோழபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: