×

வெண்ணைமலை சேரன் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கரூர், ஆக. 12: போதைப்பொருள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீங்கு குறித்தும் பொதுமக்களிடம் மற்றும் உறவினர்கள் நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் நுரையீரல் பாதிப்பு, இதயம் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்பட்டு உலகம் முழுவதும் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் இறக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாணவர்களிடம் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதை மாணவர்கள் தெரிந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெங்கமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ் ,நாக மாணிக்கம் ஆகியோர் மாணவ மாணவியரிடம் உறுதிமொழியை வாசித்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .இந்த நிகழ்ச்சியில் சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags : Vennaimalai Cheran School ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது