நஞ்சை புகளூர் அக்ரஹாரத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி

வேலாயுதம்பாளையம், ஆக. 12: கரூர் மாவட்டம் நஞ்சைப்புகளூர் அக்ரஹாரத்தில் உள்ள  புகழூர் ஹாலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம் ஆவணி மாதத்தில் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை ஆடி மாதத்தில் நேற்று வியாழக்கிழமை ஆவணி அவிட்டம் நட்சத்திரம் வந்தது. நேற்று ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை முன்னிட்டு காலையிலேயே பூணூல் மாற்றம் ஆண்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். .இதில் பிரம்ம ரகுராம சாஸ்திரி கலந்து கொண்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இதில் கிராமவாசிகள் மற்றும் சுற்றவட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பூணூலை மாற்றிக் கொண்டார்கள்.அத்துடன் சாஸ்திரிகள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர். பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவரும் ஒன்று சேர்ந்து பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அம்மனுக்கு அபிஷேகம்: கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை கோவிலில் ஆடி மாத பவுர்ணமி மற்றும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால் , தயிர், பன்னீர்,இளநீர்,சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் மாதேஸ்வரி அம்பிகை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதேஸ்வரி அம்பிகை மற்றும் மாதேஸ்வரன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் நஞ்சை புகளூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமி மற்றும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன், புன்னம் மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், நொய்யல் செல்லாண்டியம்மன், சேமங்கி மாரியம்மன், திருக்காடுதுறை மாரியம்மன், நஞ்சை புகளூர் கண்டியம்மன் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத பவுர்ணமி மற்றும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: