கரூர் பெரிய குளத்துப்பாளையம் வாரச்சந்தையில் சேதமடைந்த கடைகளை சீரமைக்க கோரிக்கை

கரூர், ஆக. 12: கரூர் பெரியகுளத்துப்பாளையம் வாரச்சந்தையின் முன்பக்க கடைகள் சிதிலமடைந்து உள்ளது. இதனை பராமரிக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையத்தில் வாரச்சந்தை வளாக கடைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது. ஆண்டுகள் செல்ல செல்ல கடைகள் அனைத்தும் மிகவும் பழுதடைந்ததால், கடைகள் செயல்படாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த கடைகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை நுழைவு வாயில் உட்புறம் உள்ள சில கடைகள் பராமரிக்கப்பட்டு, தற்போது கடைகள் அந்த வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வாரச்சந்தையின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, அனைவரின் நலன் கருதி இதனை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இந்த கடை வளாகத்தை பார்வையிட்டு இதனை பராமரிக்க அல்லது மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள விரைந்து செயல்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: