காரிமங்கலம் வாரச்சந்தையில் ₹80 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

காரிமங்கலம், ஆக.11: காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கூடும் வாரச்சந்தை பிரசித்தம். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 900 ஆடுகள், 550 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ₹80 லட்சத்திற்கு ஆடுகளும், ₹42 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. ₹5 லட்சத்திற்கு நாட்டுக்கோழி விற்பனை நடந்தது. நேற்று நடந்த சந்தையில் ₹1.27 கோடிக்கு கால்நடை வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை போல் இந்த வாரத்திலும் ஆடுகள் விற்பனை அதிகரித்தது. மாரியம்மன் மற்றும் முனியப்பன் கோயில் விழாக்கள் நடந்து வருவதால் ஆடுகள் விற்பனை சூடுபிடித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: