லாரி சங்க மகாசபை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஆக.11: கிருஷ்ணகிரியில், நகர லாரி மற்றும் மல்டி ஆக்ஸில் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஆயில் கிரீஸ் மற்றும் உதிரிபாகம், பாரத் பெட்ரோலியம் டீலர் விற்பனை நிலையத்தின், 18ம் ஆண்டு மகாசபைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் பிரான்சியஸ் சேவியர் தலைமை வகித்தார். செயலாளர் தண்டபாணி, பொருளாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் ஜெய்பிரகாஷ், சேல்ஸ் ஆபீசர் தீபக், இந்தியன் வங்கி மேலாளர் இமயவர்மன், துணை தலைவர்கள் கிருஷ்ணன், பியாரேஜான், துணை செயலாளர்கள் முகமது இஸ்மாயில், கதிர்வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாக குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், 15 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாகனங்களுக்கு எப்சி., கட்டண உயர்வுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்காக மாநில சம்மேளனத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சங்கம் மூலம் பெட்ரோல் பங்க் அமைக்கவும், சங்கத்திற்கு சொந்தமாக இடம் வாங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி டோல்கேட்டை இடம் மாற்ற வேண்டும். அதுவரை, உள்ளூர் வாகனங்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: