போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போச்சம்பள்ளி, ஆக.11: போச்சம்பள்ளி அருகே மகாதேவகொல்லஅள்ளி கிராமத்தில் காவல்துறையின் சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.  முகாமிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமை வகித்து பேசினார். சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்து கிராம மக்களிடத்தில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், 18வயதுக்கு குறைவான சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவது சட்டபடி குற்றம், அதையும் மீறி ஓட்டி வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு வழிகாட்டுதலின்படி அமைதியான முறையில் நடத்த வேண்டும். குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த பெண்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படியே குழந்தை திருமணம் நடப்பது தெரிந்தால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

Related Stories: