குட்கா விற்ற 2 பேர் கைது

திருச்சி, ஆக.11: திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள இரண்டு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா ஆகியவை விற்பனை செய்வதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது கடையில் விற்பனை செய்யப்பட்ட ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பாலசுப்பிரமணி(43), வாசுதேவன் (44) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: