சுதந்திர தினத்தையொட்டி பொலிவுபெறும் காந்திசிலை

தில்லைநகர், ஆக.11: நாடு முழுவதும் வரும் 15ம் தேதி 75ம் ஆண்டு சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கி அனைவரின் வீடுகளிலும் ஆக.15 அன்று ஏற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணல் காந்தியடிகளை நினைவூட்டும் வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வாசலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த காந்தி மண்டபம் உள்ளது. இது 1955ம் ஆண்டில் அன்றைய சென்னை அரசாட்சியின் முதல் அமைச்சர் காமராஜர் அவர்களால் நிறுவப்பட்டது. அதில் உள்ள கல்வெட்டில் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்காக காந்தி சிலை வர்ணம் பூசப்பட்டு கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் மீண்டும் எழுதப்பட்டு உள்ளது.

Related Stories: