×

தா.பேட்டை பகுதியில் 2000 பனை மரங்கள் நட விதை வழங்கல்

தா.பேட்டை, ஆக.11: தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பனை விதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆணையர் (வட்டாரம்) மனோகரன் தலைமை வகித்தார். ஆணையர் (கிராம ஊராட்சி) குணசேகரன் முன்னிலை வகித்தார். அப்போது அவர்பேசியதாவது, ஊராட்சிகளில் பனை விதைகளை நட்டு வளர்க்க வேண்டும் என திருச்சி கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் ஊராட்சிகளுக்கு பணி விதைகள் வழங்கப்பட்டுள்ளது. பனைமரம் மழை ஈர்ப்பு மையமாக செயல்படும். பனை மரங்களால் நிறைய பலன்கள் உள்ளது.  எனவே ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பனை விதைகளை நட்டு, பனை மரங்களை வளர்த்திட உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். முதல் கட்டமாக வாளசிராமணி, துளையாநத்தம், ஜடமங்களம், சிட்டிலரை ஊராட்சிகளுக்கு தலா 500 பனை விதைகள் வீதம் 2000 பனைவிதைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் ஜெயசுதா, மேலாளர் விஜயலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) செந்தில்குமார், மற்றும் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags : Tha Petai ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ