×

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மணல்மூட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரம்

தா.பழூர், ஆக.11: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்களின் நலன் கருதி உடைப்புகள் ஏற்பட்டால் தடுக்க மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் தாயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணை அவ்வப்போது முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதனால் உபரி நீரை வெளியேற்றி வருகின்றனர். வெளியேறும் உபரிநீர் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரியானது திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொள்ளிடம் கரையோரம் சந்தேகப்படக்கூடிய அதாவது உடைப்பு ஏற்படக்கூடிய இடங்களில் பொதுப்பணி துறையினர் சார்பாக மணல் முட்டைகள் தயார் செய்து அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன.
  கரையோர மக்களின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் சார்பில் மணல் மூட்டைகளை சந்தேகப்படக்கூடிய 12 இடங்கள் உட்பட்ட பல இடங்களில் கொள்ளிட கரையோர பகுதிகளில் அடுக்கி பொதுப்பணி துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags : Kollidam river ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் வாகன சோதனை தீவிரம்