செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம்

செம்பனார்கோயில், ஆக.11: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே பிரசித்திபெற்ற வாள்நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அகத்திய முனிவருக்கு சிவன் திருமண கோலத்தில் காட்சியளித்த தலம். பல்வேறு சிறப்புகளையுடைய இந்த கோயிலில் நேற்று தியோதசி, சதுர்தசி சிவராத்திரியை முன்னிட்டு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. அப்போது உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும் ருத்ர ஹோமம், ருத்ர ஜெபம் நடைபெற்றது. தொடர்ந்து தான்தோன்றீஸ்வரர் மற்றும் வாள்நடுங்கண்ணி அம்மனுக்கு 11 வகையான திரவியங்களால் ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: