பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் பட்டினத்தார் குருபூஜை

கிருஷ்ணராயபுரம், ஆக. 11: கிருஷ்ணராயபுரம் அருகே பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயத்தில் பட்டினத்தார் குரு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள ஆரணவல்லி சமேத ஆளவந்தேஸ்வரர் திருக்கோவிலில் பட்டினத்தார் குருபூஜையை முன்னிட்டு மூலவர் மற்றும் அம்பாளுக்கு பால்,தயிர், பழங்கள், திரவியங்கள் கொண்டு சிறப்பான அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் பட்டினத்தார் திருவுருவப்படத்தை அலங்கரிக்கப்பட்டு சிறப்பான ஆராதனை நடைபெற்றது. அதனைத் திறந்து கோவில் பிரகாரம் வலம் வந்து மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: