கரூர் மாநகராட்சி பகுதியில் பிளக்ஸ் போர்டு, ஆக்கிரமிப்பு அகற்ற கடும் நடவடிக்கை

கரூர், ஆக. 11: கரூர் மாநகராட்சி பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பொருட்களை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் கைப்பற்றும் என்று ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். கரூர் மாநகராட்சியில் பணிகள், தொழில் வரி,சொத்து வரி மற்றும் தொடர்பான கூட்டம் மாநகராட்சி அரங்கில் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொறியாளர் நக்கீரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளுக்கும் தேசியக்கொடி வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது.

மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளக்ஸ் போர்டு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் . மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கார்டன் அமைத்தல், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை கட்டுப்படுத்துவதற்கு அறிவிப்பு போர்டுகள் தொடர்பாகவும் அறிவுறுத்தப்பட்டது .மேலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை எவ்வாறு வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துறை முதன்மை எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: