பள்ளபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

அரவக்குறிச்சி, ஆக. 11: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் பொது நல அமைப்புகள் சார்பாக பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சுற்றுப்புற கிராம மக்கள் 188 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். பள்ளப்பட்டியில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் அரவக்குறிச்சி பள்ளபட்டி உள்ளிட்ட பகுதி சுற்றுப்புற கிராம மக்கள் 188 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். 27 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உணவு தங்குமிடம் அனைத்தும் இலவசத்துடன் அறுவை சிகிச்சை செய்ய மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Related Stories: