×

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

தூத்துக்குடி,ஆக.11:  தூத்துக்குடி வட்டாரத்தில் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி வட்டாரத்தில் குமாரகிரி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, தளவாய்புரம், கீழத்தட்டப்பாறை ஆகிய 6 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்டபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உணவு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தரிசு நிலங்களை கண்டறிந்து 15ஏக்கர் தொகுப்பு அமைத்து ஆழ்துளை கிணறு அமைத்தல், இடுபொருள் வழங்குதல் போன்ற பயன்கள் அரசு உதவியுடன் கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து தூத்துக்குடி வட்டார உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் ஆய்வு செய்தார். ஆய்வினைத்தொடர்ந்து, விசாயிகளுக்கும் , அலுவலர்களுக்கும் அவர் தகுந்த ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரகலா, துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர்கள் வடக்குவாய்ச்செல்வி, தமிழச்செல்வன், மணிகண்டன், மீனாட்சி உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு