×

பிஎம் கிசான் நிதியுதவி பெற ஆதார் உடன் செல்போன் எண் இணைப்பு கட்டாயம் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

மானூர், ஆக.11: பிஎம் கிசான் திட்டத்தில் நிதியுதவி  பெற ஆதார் எண்ணுடன் செல்போனை இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார்.  ஒன்றிய அரசின் பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு மூன்றுமுறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இதுவரையில் 11 தவணைகள் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியுதவி பெற ஆதார் எண்ணுடன் பிஎம் கிசான் இணையதளத்தில் செல்போன் எண்ணை இணைத்து ஓடிபி பெற்றால் மட்டுமே நிதியுதவி பெற முடியும் என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மானூர் வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலா கூறுகையில் ‘மானூர் வட்டார விவசாயிகள் பிஎம் கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெற ஆதார் எண்ணுடன், செல்போன் எண்ணை இணைக்க வேண்டும். அப்போது, பிஎம் கிசான் இணையதளத்திலும் செல்போன் எண்னை இணைக்கும் போது வரும் ஓடிபியை மீண்டும் உள்ளிட வேண்டும். அவ்வாறு செய்தால் தான் விவசாயிகள் தவணைத்தொகை ரூ.2 ஆயிரத்தை பெற முடியும்’ என்றார்.

Tags : PM Kisan ,
× RELATED பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் வங்கி...