தாளமுத்து நகரில் நாளை மின்தடை

தூத்துக்குடி, ஆக.10:  மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தாளமுத்து நகர் பகுதிகளில் நாளை (11ம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து, தூத்துக்குடி மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (11ம் தேதி) நடக்கிறது. இதன் காரணமாக அன்று மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம்,  மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளபட்டி, தருவைகுளம், பட்டிணமருதூர், பனையூர், மேலமருதூர், அ.குமாரபுரம் மற்றும் திரேஸ்புரம்,  பூபாலராயர்புரம், லூர்தம்மாள்புரம், அலங்காரதட்டு, மாணிக்கபுரம், குரூஸ்புரம்,  சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தரையர் காலனி, வெற்றிவேல்புரம், முத்துகிருஷ்ணாபுரம், ராமர்விளை  ஆகிய பகுதிகளில் நாளை (11ம் தேதி) காலை 8மணி முதல் மாலை 5மணி வரை  மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: