மின்சாரம் தாக்கி பேக்கரி மாஸ்டர் சாவு

நெல்லை, ஆக.10:  ஆலங்குளம் அருகே துத்திகுளம் தெற்கு காலனி தெருவை சேர்ந்த வேலு மகன் ரமேஷ்(38). இவர் வெங்கடேஸ்வரபுரம்(எ)ரெட்டியார்பட்டியில் உள்ள ஊத்துமலை ரோட்டில் இயங்கி வரும் பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று மதியம் கேக், பிரட் தயாரித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பயந்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: