பாளையில் பேராசிரியர்கள் மறியல்

நெல்லை, ஆக. 10: பாளையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா சங்கம் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட பேராசிரியர்கள் 300 பேரை போலீசார் கைது செய்தனர். பாளை. மற்றும் குமரியில் செயல்படும் தனியார் கல்லூரிகள், கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் ஆணைகளை பின்பற்ற வலியுறுத்தி மூட்டா சங்கம்  சார்பில் பாளையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மூட்டா மண்டல செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நசீர்  அகமது, சிவஞானம் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் பெருமாள், சுடலைராஜூ, தச்சை  பழனி, ராம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி பேராசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாளை. ஐகிரவுன்ட் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர  துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப் மற்றும்  போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மூட்டா சங்க நிர்வாகிகள் உள்பட 300 பேரை கைது  செய்து 2 பஸ், 3 வேன்களில் அழைத்துச் சென்று பாளை நூற்றாண்டு மண்டபத்தில்   தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: